×

கொரோனா சிகிச்சை முகாம்களில் இருந்து மருத்துவக்கழிவு 490 டன் அகற்றம்

சென்னை: தமிழக மாசுகட்டுப்பாடு வாரியம் அறிக்கை: மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய அறிவுறுத்தலின்படி, கடந்த மார்ச் முதல் கடந்த 20ம் தேதி வரை கொரோனா வுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், வீடுகள், வீட்டு பராமரிப்பு வசதிகள், ஆய்வகங்களில் இருந்து உருவான 490 டன் மருத்துவ கழிவுகள் முறையாக அகற்றப்பட்டுள்ளது.

இப்படி, அகற்றப்பட்ட மருத்துவ கழிவுகளை எட்டு பொது மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிறுவனங்களிலுள்ள எரிப்பானில் 1,200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் எரியூட்டப்பட்டு சாம்பலாக்கப்படுகின்றன. அந்த சாம்பல் கும்மிடிப்பூண்டி மற்றும் விருதுநகரிலுள்ள தமிழ்நாடு கழிவு மேலாண்மை நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம் மருத்துவக் கழிவுகள் மூலம் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : treatment camps ,Corona , Corona Treatment Camp, Medicaid, Disposal
× RELATED விளைநிலத்தில் கொட்டப்பட்ட 100 டன் சாய திடக்கழிவுகள்