×

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் 56 சதவீதம் பேர் ஓ.கே.

சென்னை: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 56 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் 42,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 23,756 பேர் குணமடைந்துள்ளனர். 523 பேர் உயிரிழந்துள்ளனர். 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த 1094 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 60.07 சதவீதம் ஆண்கள், 39.92 சதவீதம் பெண்கள். இவர்களில் 55.99 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 42.53 சதவீதத்தினர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.47 சதவீதம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மண்டலம் வாரியாக பார்க்கும் ராயபுரத்தில் 6484 பேர் ,தண்டையார்பேட்டையில் 5227 பேர், தேனாம்பேட்டையில் 5110 பேர், கோடம்பாக்கத்தில் 4649 பேர் , அண்ணாநகரில் 4585 பேர், திருவிக நகரில் 3628 பேர், அடையாரில் 2531 பேர், வளசரவாக்கத்தில் 1784 பேர், அம்பத்தூரில் 1601 பேர், திருவொற்றியூரில் 1587 பேர்,  மாதவரத்தில் 1191 பேர், ஆலந்தூரில் 965 பேர், பெருங்குடியில் 884 பேர், சோழிங்கநல்லூரில் 808 பேர், மணலியில் 624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : victims ,Corona ,Chennai , Corona, Madras
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...