×

ஓபிஎஸ் அலுவலகத்தில் 20 பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னை: தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்தில் பணிபுரிந்த 20 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தலைமை செயலக ஊழியர்களையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். முதல்வர் அலுவலகத்தின் தனி செயலாளர் தாமோதரன் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த வாரம் மரணம் அடைந்தார்.இதையடுத்து தலைமை செயலக ஊழியர்கள் பயத்துடனே பணிக்கு வந்து செல்கிறார்கள்.

அதேநேரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பணியாளர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள துணை முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய 20 பேருக்கு நேற்று 2வது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tags : Corona ,office ,OPS ,corona test , OPS Office, Corona Inspection
× RELATED கொரோனா பரிசோதனை முடிவை விரைவில் வழங்கக்கோரி மேலும் ஒரு வழக்கு