×

ராகுல் கேள்வி எல்லையில் சீனா ஆக்கிரமித்துள்ளதா?.. நட்டா பதிலடி

புதுடெல்லி: எல்லையா சீனா ஆக்கிரமித்துள்ளதா என காங்கிரஸ் தலைவர் ராகுலின் கேள்விக்கு, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி கொடுத்துள்ளார். லடாக் எல்லை மோதல் விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி, நேற்று தனது டிவிட்டரில் தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி எடுத்த கிழக்கு லடாக் பாங்காங்க் திசோ ஏரியின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அத்துடன், ‘சீனாவின் ஆவேசத்திற்கு எதிரான நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம். இந்திய எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா?’ என கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது டிவிட்டர் பதிவில், ‘முதலில் காங்கிரஸ், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒப்பந்தம் செய்தது. பின்னர், சீனாவிடம் நிலத்தை கொடுத்து சரண் அடைந்தது. டோக்லாம் பிரச்னையின் போது, ராகுல் காந்தி ரகசியமாக சீன தூதரகத்திற்கு சென்று வந்தது ஞாபகமிருக்கா? இதுபோன்ற முக்கியமான சூழல்களில், ராகுல் நாட்டை பிளவுபடுத்தி, ராணுவத்தின் நம்பிக்கையை உடைக்கிறார். இதெல்லாம், சீனாவுடன் காங்கிரஸ் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவுதானோ?’ என கூறி உள்ளார்.

கடந்த 2008ல் காங்கிரஸ் பொதுச் செயலாளராக ராகுல் இருந்த போது, சீனாவின் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். ‘முக்கியமான பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களை இரு கட்சிகளும் இணைந்து ஆலோசிக்கும் என்பதே ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்,’ என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : China ,Rahul ,border , Rahul Question, Border, China, Natta
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...