×

ஜம்முவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்முவில் நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் சமீபகாலமாக தீவிரவாதிகள் வேட்டையை ராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பந்த்சோ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி தொடுத்தனர். இதில், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் சிஆர்பிஎப் வீரர் வீர மரணம் அடைந்தார்.


Tags : militants ,Jammu , Jammu, 2 terrorists shot dead
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...