×

சீனாவுக்கு மத்திய அரசு அடுத்த அடி; ஆன்லைன் பொருட்கள் விற்பனையிலும் கெடுபிடி: தயாரித்த நாடு பெயரை குறிப்பிட உத்தரவு

புதுடெல்லி: ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்களை விற்பனை செய்யும்போது, அவை எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை நிறுவனங்கள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வர்த்தக துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒவ்வொரு இ- காமர்ஸ் போர்ட்டலும் தங்களின் தளங்களில் விற்கப்படும் ஒவ்வொரு தயாரிப்புக்களிலும், அதை தயாரித்த நாட்டின் பெயரை கட்டாயமாக குறிப்பிட வேண்டும். இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பாக பதிவிட்டுள்ள பொருட்களுக்கும் விற்பனையாளர்கள் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

பின்பற்ற தவறும்பட்சத்தில் அரசு இ போர்ட்டலில் இருந்து அவர்கள் பொருட்களின் பட்டியல் நீக்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது. இது பற்றி அதிகாரிகள் கூறியதாவது: பொருட்களை தயாரித்த நாட்டின் பெயரை இ- போர்ட்டலில் குறிப்பிட்டால்தான், அது நாட்டின் பொருள் என்பதை மக்கள் அறிந்து கொண்டு, அதை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய முடியும், அதே நேரத்தில் சீன பொருட்களை புறக்கணிக்க முடியும் என்றனர்.

Tags : country ,government ,China Prohibition , China, central government, online goods sales
× RELATED காவேரி கூக்குரலின் முக்கனி விழாவில் ஈஷாவுக்கு தி.மு.க எம்.பி வாழ்த்து!