×

கொரோனாவை பரப்பிய டென்னிஸ் போட்டி: போட்டியை நடத்திய ஜோகோவிச்சும் தப்பவில்லை

பெல்கிரேடு: உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர்  நோவோக் ஜோகோவிச் நடத்திய டென்னிஸ் போட்டி  வீரர்கள் உட்பட பலருக்கு கொரோனாவை பரப்பிய போட்டியாக மாறியுள்ளது. போட்டியை நடத்திய ஜோகோவிச்சும் தப்பவில்லை. கொரோனா பீதியால்  உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டன. பீதி குறையாத நிலையில் கால்பந்து, பேஸ்பால் என மீண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளன. அதே வேகத்தில் டென்னிஸ் போட்டியை  நடத்த உலகின் முதல்நிலை வீரர்  நோவக் ஜோகோவிச்(செர்பியா) ஆசைப்பட்டார். அதனால்  பக்கத்தில் உள்ள பால்டிக் நாடுகளை சேர்ந்த  முன்னணி வீரர்கைள வைத்து கடந்த வாரம் செர்பிய தலைநகர் பெல்கிரேடில்  ‘அட்ரியா கண்காட்சி டென்னிஸ் போட்டி’யை தொடங்கினார். இந்த போட்டி குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ஜோகோவிச், ‘இந்தப் போட்டியை நடத்துவது ஆபத்தானது,

ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்று நீங்கள் விமர்சனம் செய்யலாம். செர்பிய அரசாங்கம் சொல்வதைதான் நாங்கள் செய்கிறோம்’ என்று கூறினார். கூடவே போட்டியை திட்டமிட்டபடி நடத்தியும் முடித்தார். ஆனால் போட்டியின் போது வீரர்கள்  தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவில்லை. கட்டிப்பிடித்தும், கை குலுக்கியும் கொண்டாடி கொரோனாவை கண்டுக் கொள்ளவில்லை. கூடேவ கேளிக்கை, இரவு விடுதிக்கு செல்வது, கொண்டாடமாக இருந்துள்ளனர். அரங்கில் இருந்த 25 ஆயிரம் வீரர்கள் தனிநபர்  இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றாலும் முககவசம் அணிந்திருந்தனர். அதே நேரத்தில் வீரர்களுடன் கை குலுக்கவும், செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர். விமர்சனங்கள் தொடர்ந்தாலும் போட்டி முடிந்ததும் நோவக் ஜோகோவிச் தம்பி  ஜார்ட்ஜே  ஜோகோவிச், ‘ வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இல்லை’ என்று கூறியிருந்தார்.

ஆனால் போட்டி முடிந்த  கடந்த 2 நாட்களில் வீரர்கள் கொரோனா தொற்கு ஆளாகி இருக்கும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பல்கேரிய வீரர்  கிரிகர் டிமிடோவ், அரையிறுதியில் தோற்றதற்கு காரணம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததுதான் என்று கூறியுள்ளார். அதனால் அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து குரேஷிய வீரர் போர்னா கோரிக், செர்பியா வீரர் விக்டர் ட்ரொக்கி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் வரை 4 வீரர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டியை நடத்திய ஜோகோவிச்சுக்கும் நோய் தொற்று நேற்று மாலையில் உறுதி செய்யப்பட்டுள்ளது  ரசிகர்ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  போட்டியில் பங்கேற்ற உலகின் 3ம் நிலை வீரர் டொமினிக் தீம்( ஆஸ்திரியா ), 7ம் நிலை வீரர்  அலக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) ஆகியோருக்கான சோதனை முடிவுகள் இன்னும் ெவளியாகவில்ைல

Tags : Djokovic ,tennis match ,tournament ,Corona , Corona, Tennis Tournament, Djokovic
× RELATED சில்லிபாயின்ட்…