×

உடுமலை சங்கர் வழக்கு அதிமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி அறிவிப்பு

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை : உடுமலை சங்கர் கொலைக் குற்றவாளிகளில் முக்கியமானவர்கள் அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த தீர்ப்பு உலகெங்கும் வாழக் கூடிய இரண்டு கோடிக்கு மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர்கள் நெஞ்சில் வேல் கொண்டு பாய்ச்சுவதற்கு சமமானதாகும். இந்த சம்பவத்திற்கு சிசிடிவி காட்சிகள் இருந்தும், கண்ணுற்ற சாட்சிகள் பல இருந்தும் கொலைக்கு யார் தூண்டுதலாக இருந்தார்களோ, யார் இந்த கொலையால் பயனடைய நினைத்தார்களோ, அக்குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பது எந்த நீதியின் அடிப்படையில் இந்த வழக்கை உள்நோக்கத்தோடு நடத்தி முதல் குற்றவாளி விடுதலையாக காரணமாக இருந்த அதிமுக அரசை கண்டித்து அனைத்து மாவட்ட, ஒன்றியங்களில் இந்த மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : case protests ,government ,Udumalai Shankar ,party ,Tamil Nadu ,AIADMK ,Krishnaswamy , Udumalai Sankar, Athmika, demonstration
× RELATED சூழ்நிலை சரியான பிறகே பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு