×

கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள ₹13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்லும்போது அதை கட்டுப்படுத்த புதுப்புது உத்திகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான அரசின் செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை, நிதிப்பற்றாக்குறை மானியம் உள்ளிட்ட சில தலைப்புகளில் மத்திய அரசு உதவிகளை வழங்கினாலும் கூட, தமிழக அரசு கோரிய நிதி உதவிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.மாநில அரசுகளுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். எனவே, தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு ஏற்கனவே கோரியிருந்த ₹12,000 கோடி, உணவு தானியங்கள் கொள்முதல் செய்வதற்கான மானிய நிலுவைத் தொகை ₹1,321 கோடி ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

Tags : government ,Ramadas , Corona Prevention Work, Finance, Federal Government, Ramadas
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்