×

சிங்கப்பூர் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: விமானி சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு

சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்  சிறப்பு விமானம் நேற்று பகல் 12  மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 156 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 162 பேர் இருந்தனர். பயணிகளில் 17 பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள். மீதி 139 பேர்   என்ஆர்ஐ   எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். இவர்கள் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதிபெற்று இந்த விமானத்தில் சிங்கப்பூர்  செல்கின்றனர். விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத்தொடங்கியபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.

இதையடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். பின்பு அவசர அவசரமாக ஓடுபாதையிலேயே விமானத்தை  கொண்டு வந்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு,  விமான பொறியாளர்கள் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின் விமானம் பிற்பகல் 1.25  மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து துரித நடவடிக்கை எடுத்ததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.

10 விமானங்கள் ரத்து
கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகள் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. சென்னையில் இருந்து நேற்று மதுரைக்கு 3 விமானங்கள், திருச்சிக்கு 2, தூத்துக்குடிக்கு 2 மற்றும் டெல்லி, கொல்கத்தா, அந்தமான், ஐதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 29 விமானங்கள் இயக்கப்பட்டன. போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் கொச்சி, மைசூர், கடப்பா, ராஜமுந்திரிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு செல்வதும், திரும்பி வருவதுமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், காலை 8.55 மணிக்கு டெல்லிக்கும், காலை 9.50 மணிக்கு ஐதராபாத்துக்கும் செல்ல வேண்டிய ஏர் ஏசியா விமானங்களும் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டன. போதிய பயணிகள் இல்லாமல் நேற்று மட்டும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags : Singapore , Singapore, mechanical disorder, pilot
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...