×

மதுரையை தொடர்ந்து தேனியிலும் முழு ஊரடங்கு.....! கொரோனா பரவல் அதிகரிப்பால் ஆட்சியர் அதிரடி

தேனி: கொரோனா பரவல் எதிரொலியால் தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு. நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஜூன், 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பொதுமக்கள் வாழ்வாதாரம் கருதி, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நோய் பரவல் அதிகமுள்ள, பல்வேறு மாவட்டங்களில், நோய் பரவலை தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்தும்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அதை பரிசீலனை செய்த அரசு, மதுரை மாவட்டத்தில், முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பல்லி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்தியில், நாளை மாலை 6 மணி முதல் மறு உத்தரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது, காய்கறி,மளிகை, உள்ளிட்ட கடைகள் மதியம் 2 மணி வரை செயல்படும், ஓட்டல்கள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்கள் மட்டும் அனுமதிக்கப்படும். டீக்கடை, பேக்கரி, பெட்டிக்கடை ஆகியன திறக்க அனுமதியில்லை. கம்பம், தேனி, போடி நாயக்கனூர், கூடலூர், சின்னமனூர் பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும். கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் இறைச்சி கடைகள் இயங்காது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Collector Action ,Madurai , Madurai, Theni, Full Curfew, Corona
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி