×

பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்த 'கொரோனில்'மருந்துக்கு மத்திய அரசு தடை: மருந்தின் கலவை விவரங்களை அளிக்க உத்தரவு

டெல்லி: கொரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி பாபாராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்த மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதஞ்சலி நிறுவனம் மருந்து விளம்பரத்தை நிறுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பெயர், மருந்தின் கலவை பற்றிய விபரங்களை பதஞ்சலியிடம் கேட்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ், இதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பிரபல யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை 7 நாட்களில் கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தது.

இது தொடர்பாக பாபா ராம்தேவ் கூறியதாவது; நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தின் பெயர் கொரோனில் ஸ்வாசரி. டில்லி, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 280 கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு என்.ஐ.எம்.எஸ். என்ற பல்கலைக் கழகத்தின் உதவியுடன் நாங்கள் நோயாளிகளுக்கு எங்களது மருந்தை கொடுத்து ஆய்வு செய்தோம். அனைவருமே 100% குணமடைந்துவிட்டனர். கொரோனா தடுப்பு மருந்தை உலக நாடுகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இந்த தருணத்தில் எங்களது நிறுவனம் மருந்து தயாரித்திருப்பதை பெருமையாக கொள்கிறோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கொரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி பாபாராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்த மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் அறிமுகப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஆயுர்வேத மருந்து விவரங்களை அளிக்கும் படி மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கூறப்பட்ட விஞ்ஞான ஆய்வின் கூற்று மற்றும் விவரங்கள் அமைச்சுக்குத் தெரியவில்லை என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்ட மருந்துகளின் விளம்பரங்கள் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுகளின் கீழ் தடை செய்யப்படுகின்றன. பதஞ்சலி ஆயுர்வேத் கூறிய கூற்றுக்களை சரிபார்க்க கொரோனா சிகிச்சைக்காக கோரப்படும் மருந்துகளின் பெயர் மற்றும் கலவை பற்றிய விவரங்களை விரைவாக வழங்குமாறு மத்திய ஆயுஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆய்வு செய்யும் தளம் ,  மருத்துவமனை, நெறிமுறை, மாதிரி அளவு, நிறுவன நெறிமுறைக் குழு அனுமதி, சி.டி.ஆர்.ஐ பதிவு மற்றும் ஆய்வின் முடிவுகளின் தரவு ஆகியவை  பிரச்சினை முறையாக ஆராயப்படும் வரை  விளம்பரப்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags : government ,Patanjali ,company ,drug deal , Patanjali, Coronel, Pharmaceutical, Federal Government
× RELATED மன்னிப்பு கேட்ட பதஞ்சலி நிறுவனம்.....