உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச்க்கு கொரோனா....! செர்பிய கிளப்பின் 5 வீரர்களுக்கு பாதிப்பு உறுதி

செர்பியா: உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களது குடும்பங்களுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இருப்பினும் சில நாடுகளில் கொரோனாவுக்கு மத்தியிலும் விளையாட்டுப்போட்டிகள் பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் அட்ரியா டூர் என்ற டென்னிஸ் தொடர் செர்பியா குரோஸியா ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிகளை ரசிகர்கள் காணவும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரர் செர்பியாவின் ஜோகோவிச் சக வீரர்களுடன் இணைந்து கண்காட்சி டென்னிஸ் தொடர் நடத்த முடிவு செய்தார். அட்ரியாவில் முதல் தொடர் நடந்தது.

இதில் சமூக இடைவெளியே ரசிகர்கள் பின்பற்றவில்லை என புகார் எழுந்தது. டென்னிஸ் வீரர்கள் உட்பட 1000 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. முடிவில் உலகத் தரவரிசையில் 19வது இடத்திலுள்ள பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவுக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து குரோஷியாவில் ஜோகோவிச் விளையாட இருந்த பைனல் உட்பட தொடர் முழுவதும் ரத்தானது. டிமிட்ரிரோவுக்கு எதிராக விளையாடிய மற்றொரு முன்னணி வீரர் குரோஷியாவின் போர்னா கோரிச்சிற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

தவிர செர்பிய கிளப்பின் 5 வீரர்களுக்கும் தொற்று இருப்பது தெரிந்தது. அடுத்தடுத்து பல வீரர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால், ஜோகோவிச்சும் பெல்கிரேடு சென்று சோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. ஜோகோவிச் மனைவி ஜெலினாவுக்கும் தொற்று இருப்பது தெரியவர, இருவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவரது குழந்தைகள் தொற்றில் இருந்து தப்பினர்.

Related Stories:

>