×

தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்; மருத்துவக் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்க...! உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளத்தில் இறந்த தந்தை, மகனின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கடைகளை திறந்ததால் விசாரணைக்காக தந்தை, மகன் ஆகியோர் கோவில்பட்டி கிளைச்சிறை அழைத்து செல்லப்பட்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் கொண்ட மருத்துவக் குழு பரிசோதனையை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை திட்டியுள்ளார். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜுக்கும் வாக்குவாதம் மூண்டது. இதனை கண்ட பென்னிக்ஸ் போலீசாருடன் சமாதானம் பேச முயன்ற போது, கைகலப்பு வரை சென்றுள்ளது. இதையடுத்து, விதி முறைகளை மீறி கடை நடத்தி வந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று இரவு தமக்கு அதிகமாக வியர்வை வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அரசு மருத்துவமனையில் பென்னிக்ஸ்-ஐ சேர்ந்துள்ளனர். ஆண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி பென்னிக்ஸ் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து தந்தை ஜெய ராஜுக்கும் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை ஜெயராஜ் உயிரிழந்துள்ளார். இருவரின் உடலையும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்த 2 பேரின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யக்கோரி உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்  உடற்கூடாய்வை வீடியோவாக பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் கணவர், மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர். உடற்கூராய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : incident ,autopsy ,team , Father, Son, Medical Group, Autopsy, High Court Branch
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...