×

ஈரோடு சந்தையில் காய்கறி வியாபாரிக்கு கொரோனா உறுதி...! : வெளியே நடமாட மக்கள் அச்சம்!!!

ஈரோடு :  ஈரோடு பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் காய்கறி சந்தையில் வளையக்காரத் தெருவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  ஏற்கனவே இத்தெரு முழுமையாக சீல் வைக்கப்பட்டு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சூழலில் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய காய்கறி சந்தையில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மற்ற நபர்களுக்கும் வைரஸ் தொற்று மேலும் பரவி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

நோய் தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக, ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் பேருந்து நிலையத்திற்கு
மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இங்கும்சமூக இடைவெளியோ அல்லது முககவசம் அணியும் விதிமுறையோ சரிவர பின்பற்றப்படாததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில், வியாபாரிக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், அங்குள்ள சக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர்.

இதையடுத்து, பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கொரோனா தடுப்பு பணிகளை தற்போது முழுமையாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட  வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும் சந்தையின் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்  விஸ்வரூபம் எடுத்து பரவிய கொரோனா நோய்தான், தொடர்ந்து அனைத்து இடங்களிலும் பரவி வருவதை நாம் அறிந்துள்ளோம்.  இதனால், சந்தையில் ஒலிபெருக்கி மூலம் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கையானது தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

Tags : dealer ,Corona ,Erode , Erode, market, vegetable, dealer, corona, sure, people, fear
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!