×

ஒருவருக்கு கொரோனா தொற்று எதிரொலி :தஞ்சையில் 15 நாட்கள் சுய ஊரடங்கு அறிவித்து முன்மாதிரியாக திகழும் கிராமம்!!

தஞ்சை:  கொரோனா அச்சத்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பை கருதியும், தஞ்சை அருகே ஒரு கிராம மக்கள், 15 நாட்களுக்கு சுய ஊரடங்கை அமல்படுத்தி உள்ளனர்.தஞ்சையை அடுத்த மருங்குளம், நான்கு ரோடு பகுதியில், காய்கறி, மளிகை கடைகள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள் என, 100க்கும் அதிகமான கடைகள் உள்ளன. அப்பகுதியை சுற்றியுள்ள, 20 கிராமங்களுக்கு, இப்பகுதி மையமாக உள்ளதால், தினமும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருங்குளம் கிராம மக்களும், வணிகர்களும் ஒட்டுமொத்தமாக, 15 தினங்களுக்கு அனைத்து கடைகளையும் மூடுவதாக அறிவித்து, நேற்று முதல் சுய ஊரடங்கை அமல்படுத்தினர். மேலும், மருங்குளம் நான்கு ரோடுக்கு, அருகாமை கிராம மக்கள் யாரும் பொருட்கள் வாங்க வரவேண்டாம் எனவும் விளம்பரம் செய்துள்ளனர். பெட்ரோல் பங்க், மெடிக்கல், டாஸ்மாக் கடை மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. மருங்குளம் வணிகர்கள் கூறுகையில், கொரோனா பரவலை தடுக்க, சுய ஊரடங்கை கடைப்பிடிக்கிறோம். இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம், இங்கு உள்ள டாஸ்மாக் கடையையும், 15 நாட்கள் மூடினால் நன்றாக இருக்கும் என்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு இச்சுய ஊரடங்கை பிறப்பித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Someone ,Village , Corona, infection, asylum, 15 days, self-curfew, village
× RELATED சிறையில் இருப்பவரை ஜாமீனில்...