×

WWE-ன் மிகப்பெரிய சகாப்தம் முடிகிறது; நான் சாதிக்க எதுவும் இல்லை....! ரெஸ்ட்லிங் மர்மம் அண்டர்டேகர் ஒய்வு பெறுவதாக அறிவிப்பு

நியூயார்க்: கடந்த 30 வருடங்களாக ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டின் மிகப்பெரிய சகாப்தம் என்று கருதப்படும் அண்டர்டேகர், ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அண்டர்டேகர் தி ஃபைனல் ரைட் என்கிற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது அண்டர்டேகரின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் ஆவணப்படம். இதன் கடைசிப் பகுதியில், தனக்கு மீண்டும் ரெஸ்ட்லிங் மேடையில் ஏறும் எண்ணம் இல்லை என்று அண்டர்டேகர் குறிப்பிட்டுள்ளார். என்றும் முடியாது என்று சொல்லக்கூடாது. ஆனால், என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், மீண்டும் அந்த மேடையேறும் எண்ணம் எனக்கு இல்லை. பயணத்தை முடிக்கும் நிலையில் நான் இருக்கிறேன். நான் சாதிக்க எதுவும் இல்லை. ஜெயிக்க எதுவுமில்லை.

ஆட்டம் மாறிவிட்டது. புதியவர்கள் வருவதற்கான நேரம் இது. இதுதான் சரியான நேரமாகத் தோன்றுகிறது. இந்த ஆவணப்படம் அதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியிருக்கிறது. வாழ்க்கையின் பெரிய பாகத்தைப் பார்க்க என் கண்களை இது திறந்திருக்கிறது என்று அண்டர்டேகர் பேசியுள்ளார். மார்க் காலவே என்பதே அண்டர்டேகரின் இயற்பெயர். 1990-ம் ஆண்டு உலக ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டு என்று சொல்லப்படும் WWE-ல் இவர் அறிமுகமானார். கடைசியாக இவர் ரெஸில்மேனியா 36-ம் பதிப்பில் விளையாடினார். அதில் வெற்றி கண்டார். இதுவரை ரெஸிமேனியாவில் சண்டையிட்ட 27 போட்டிகளில் 25-ல் அண்டர்டேகர் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : WWE ,Wrestling Mystery Undertaker Announces Retirement WWE ,Wrestling Mystery Undertaker Announces Retirement , WWE, Era, Wrestling, Undertaker, Leisure
× RELATED WWE முன்னாள் வீராங்கனை சாரா லீ மரணம்