×

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு: மதுரை சிறப்பு அதிகாரி குழந்தைசாமி அறிவுறுத்தல்


சென்னை : தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக மதுரை மண்டல கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி குழந்தைசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளரிடம் பேசிய அவர், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளை கூர்ந்து நோக்கும்போது பன்றிக்காய்ச்சல் பரவிய நகரங்களிலெல்லாம் கொரோனா வைரஸ் தற்போது பரவி வருவதை நம்மால் அறியமுடிகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேலூர், திருச்சி, கோவை, தஞ்சை, திண்டுக்கல், ஓசூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, சேலம், தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மற்றும் அண்டைமாநிலமான புதுச்சேரியிலும் கொரோனா மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அனைவரும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம், 60 வயதிற்குப்பட்டவர்கள், சிறுகுழந்தைகள் என அனைவரும் பாதுகாப்பாக வீடுகளில் இருக்கவேண்டும் எனவும் அறிவுரை கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, ஏதேனும் சிறு காய்ச்சலோ அல்லது இருமலோ ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Tags : areas ,Madurai ,Special Officer ,Tamil Nadu , Tamil, Swine Flu, Areas, Coronavirus
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு