×

முதல்வர் பழனிசாமி வருகை எதிரொலி: திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை தீவிரம்!!!

திருச்சி:  குடிமராமத்து பணி ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 26ம் தேதி திருச்சி செல்லும் நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் திருச்சி அரசு பொது மருத்துவமனை மருத்துவர் வனிதா ஆகியோருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும், மருத்துவர்கள், சுகாதார துறை ஊழியர்கள், வருவாய்த்துறை, பொதுத்துறை, வேளாண்துறை மற்றும் ஆற்று பாதுகாப்பு கோட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, நாளை, செய்தியாளருக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் கொரோனா பரிசோதனையானது நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே வரும் வெள்ளிக்கிழமை முதல்வர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பரிசோதனையின்போது கொரோனா தொற்று இல்லை என்பவர்களை மட்டுமே அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவதாகவும் மற்றவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் மாவட்ட அரசு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா பரிசோதனையானது இன்று இதுவரை 100 பேருக்கும், இதனை தொடர்ந்து நாளை 150 பேருக்கும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Coronation test ,office ,Trichy Collector , CM, Palanisamy, Echo, Trichy, Collector, Corona, Experiment
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...