×

2015ம் ஆண்டு முதல் 2,264 முறை சீன ராணுவம் ஊடுருவியது குறித்து மோடியிடம் கேள்வி கேட்க துணிவிருக்கிறதா ? : ஜே.பி. நட்டாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி

சென்னை : கடந்த 5 ஆண்டுகளில் இந்திய எல்லைக்குள் 2,264 முறை சீன ராணுவம் ஊடுருவியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 2010  முதல் 2013ம் ஆண்டு வரை எல்லையில் நடந்த 600க்கும் மேற்பட்ட ஊடுருவல் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஜே.பி.நட்டாவுக்கு விளக்கம் அளித்துள்ள ப. சிதம்பரம், தங்கள் காலத்தில் ஊடுருவல் நடந்தது என்றாலும் ஒரு வீரரும் உயிரிழக்கவில்லை என்று அங்கு அங்குல நிலம்கூட சீனாவிற்கு தாங்கள் விட்டு தரவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரம் 2015ம் ஆண்டு முதல் நடந்த 2,264 முறை சீன ராணுவம் ஊடுருவியது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி கேட்க நட்டாவுக்கு துணிச்சல் இருக்கிறதா என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.  லடாக்கில் ராணுவ கமாண்டர்கள் இடையேயான பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்ட விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அவை சீனா ஊடுருவியிருப்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் ப. சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags : times ,Modi ,Chinese ,JP P Chidambaram , 2015, Year, 2,264, Chinese Army, Infiltrated, Modi, Question, J.P. Nata, p.Chidambaram, Question
× RELATED 8வது முறையாக வரும் 15ம் தேதி பிரதமர்...