மாலத்தீவில் சிக்கிய தொழிலாளர்கள் 198 பேர் மீட்பு.: ஐராவத் கப்பல் மூலம் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர்

தூத்துக்குடி: கொரோனா ஊரடங்கள் மாலத்தீவில் சிக்கி இருந்த தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 198 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தனர். பொது முடக்கத்தால் மாலத்தீவில் சிக்கிக்கொண்ட தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து இருந்தனர்.

அதன் படி இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து 198 பேர் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்து இந்திய தொழிலாளருக்கு கொரோனா தொற்று கண்டறிய முதற்கட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதனையடுத்து அனைவரையும் பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதில் 195 பேர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் 3 பேரும், மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தை மட்டும் சேர்ந்தவர்கள் 64 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>