×

நாமக்கல் மற்றும் சேலத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பயோ கேஸ் உற்பத்தி பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் கோழி கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்கும் ஆலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  மேலும் இந்திய கார்ப்பரேஷன் சார்பில் நாமக்கல்லில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் உயிரி எரிவாயு தயாரிக்கும் ஆலை திறக்கப்பட்டுள்ளது. ஆலையை திறந்து வைத்து பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது; காற்றாலை மின் உற்பத்தி திறன் 8523 மெகாவாட்டாக இருக்கிறது. சென்னையின் மின்தேவையை பூர்த்தி செய்ய 2 கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

புதிய திட்டம் சென்னையை சுற்றியுள்ள பகுதியில் தமிழக அரசால் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சூரிய ஒளி மின் ஆற்றல் உற்பத்தி 4,054 மெகாவாட்டாக இருக்கிறது எனவும் தெரிவித்தார். இந்த ஆலையை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். பயோ கேஸ் விற்பனைக்கு நாமக்கல் மற்றும் சேலத்தில் 5 சில்லறை விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. பயோ கேஸ் விற்பனைக்கு நாமக்கல் மற்றும் சேலத்தில் 5 சில்லறை விற்பனை நிலையங்களை  ரூ.25 கோடி மதிப்பீட்டில் உற்பத்தி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Tags : first ,Salem ,Palanisamy ,Namakkal , Namakkal, Salem, Bio Gas Production, Chief Minister Palanisamy
× RELATED விஷம் குடித்த கணவர் சாவு மருத்துவமனையில் மனைவி தற்கொலை