×

இந்தியா, சீனா இடையே 10 நாட்களாக நிலவி வந்த போர் பதற்றம் முடிவுக்கு வந்தது : எல்லையில் இந்தோ - திபெத் போலீஸ் படையை காவல் பணிக்கு வைக்க திட்டம்!!

டெல்லி : லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு படைகளையும் விளக்கிக் கொள்ள இந்தியா, சீனா முடிவு செய்துள்ளது. காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக்கை அடுத்த மோல்டோ என்ற இடத்தில் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.சுமார் 12 மணி நேரமாக எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், தற்போது ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி, மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து, இரு நாட்டுத் துருப்புகளையும் விளக்கிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் 28 முதல் 30 கம்பெனிகள் வரையிலான இந்தோ - திபெத் போலீஸ் படையை காவல் பணிக்கு அமர்த்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்த பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்வது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த 15ம் தேதி கிழக்கு லடாக்கில் இந்திய,  சீன ராணுவத்தினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு  ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது சுமூக தீர்வு எட்டப்பட்டு இருப்பது பதற்றத்தை தனித்துள்ளது.     


Tags : India ,China ,border ,police force ,Tibet ,Indo ,war ,Indo-Tibetan , India, China, tension, border, Indo-Tibet, police, force, police, plan
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...