×

விளைச்சல் அதிகரிப்பால் விலையில் விழுந்த சின்னவெங்காயம்

சின்னமனுர்: சின்னமனூர் பகுதியில் சின்ன வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ளதால், சந்தைகளில் விலை குறைந்து விற்கப்படுகிறது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் உள்ள மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம், கூழையனூர், புலிகுத்தி, தர்மத்துப்பட்டி, அய்யம்பட்டி, அப்பிபட்டி, அய்யனார்புரம், எரசக்கநாயக்கனூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் 2 மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் விதைத்தனர். தற்போது சின்ன வெங்காயம் வளர்ந்து நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. இதையடுத்து அவற்றை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இப்பகுதிகளில் விளையும் சின்ன வெங்காயம் தரம் பிரிக்கப்பட்டு சின்னமனூர், தேனி, மதுரை உள்ளிட்ட சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ரூ.80 முதல் 90 வரை விற்ற சின்ன வெங்காயம் தற்போது சந்தைகளில் ரூ.40க்கு விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சின்ன வெங்காயம் விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : increase , fall, price , increase , yield
× RELATED ஒன்றிய அரசின் வரியில்லா வர்த்தக...