×

ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு.: குற்றப்பிரிவு போலீஸ் தொடர்ந்த மனு ஐகோட்டில் தள்ளுபடி

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பட்டியல் வகுப்பு மக்கள் குறித்தும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்ததாக கடந்த மே 23-ம் தேதி ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டார்..

அவருக்கு சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றம் ஜூன் 1-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி சதீஸ்குமார், இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்கள் குறித்து கருத்தரங்கில் ஒன்றில் சர்ச்சையான கருத்தை தெரிவித்தார் என்பது புகார் ஆகும்.


Tags : RS ,Bharti , RS. Refusal ,cancel, Bharti, bail
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி...