×

சென்னையில் திருமழிசை காய்கறி சந்தைக்குள் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதி!

சென்னை:  சென்னையில் நேற்று இரவு பெய்த மழையால், திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. அதனால், லாரிகளில் வந்த காய்கறிகளை இறக்கி வைக்க முடியாமல் வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். கோயம்பேடு மார்க்கெட் தற்போது செயல்படாமல் இருக்கிறது. அதற்கு பதிலாக, தற்காலிகமாக திருமழிசை காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக மார்க்கெட் வளாகம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, கீழே அடுக்கி வைக்கப்பட்ட  காய்கறி மூட்டைகள் அனைத்தும்  நீரில் மூழ்கி நாசமாகின. மேலும்,  மார்க்கெட் வளாகம் முழுவதும் நீர் நிரம்பி இருப்பதால் பலவகையான காய்கறி மூட்டைகள் லாரிகளிலிருந்து இறக்கி வைக்காமலே இருக்கின்றனர். ஏற்கனவே மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டதால் வியாபாரம் மந்தநிலையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தற்போது, ஏற்பட்டுள்ள சேதத்தால், வியாபாரிகள் பெரிதும் வேதனையடைந்துள்ளனர். நேற்று ஒருநாள் பெய்த மழை காரணமாகவே வளாகம் முழுவதும் நீர் நிரம்பி உள்ளது.

எனவே இதற்கு சிஎம்டி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், நாங்கள் நிறைவான காய்கறிகளை கொண்டு சேர்க்க முடியும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த இடத்தில், மேலும் சில நாட்கள் வியாபாரம் செய்யக்கூடிய சூழல்  ஏற்பட்டிருப்பதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விபாரிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Traders ,Chennai ,Vendors ,Tirumalai Vegetable Market , Chennai, Tirumalai Vegetable, Market, Rain Water, Merchants, Avadi
× RELATED திருவேங்கடம் அருகே புகையிலை பதுக்கிய 2 வியாபாரிகள் கைது