×

ஆனைகட்டி அருகே வாயில் காயத்துடன் சுற்றிய காட்டு யானை பலி

பெ.நா.பாளையம்:  கோவை ஆனைகட்டி அருகே வாயில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டு யானை பரிதாபமாக நேற்று உயிரிழந்தது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கோபநாரி பிரிவு ஆணைகட்டி வடக்கு ஜம்பு கண்டி வனப்பகுதியில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று வாயில் காயத்துடன் சுற்றி வந்தது. இதனால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டு வந்தது. வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமாரன் வரவழைக்கப்பட்டு யானைக்கு வலி நிவாரணி மற்றும் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பலாப்பழம் மற்றும் வாழைப்பழம் மூலமாக வழங்கப்பட்டது.  

 கடந்த இரண்டு நாட்களாக யானை உணவு சாப்பிட முடியாமல் சோர்வுடன் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. எதனால் யானை இறந்தது என்று பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் உடலின் மாதிரியை பரிசோதிக்கவும்  வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்பு யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : elephant , Wild elephant,kills , wound ,mouth near elephant
× RELATED சிறுவாணியில் உடல்நலம் குன்றிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு