×

கொரோனாவின் கொடூரத்தையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் : மைதானத்திற்கு சீல் வைத்த வட்டாச்சியருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

கோவை: கோவையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், நோய் கொடூரத்தையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறியவர் முதல், அறிவுரை கூற வேண்டிய பெரியவர் வரை விளையாடி வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் பர்லி மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதாக கிடைத்த தகவலையடுத்து, தெற்கு தாசில்தார் அருள்முருகன் மற்றும்  ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

 அங்கு விளையாடிக் கொண்டிருந்த, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவின் தாக்கம் குறித்தும், குடும்ப பொறுப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக, நம்மால் குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பன உள்ளிட்ட வாசகங்களை விளையாடியவர்கள் உறுதிமொழியாக ஏற்றனர்.  அதன்பின்னர், தெற்கு தாசில்தார் அருள்முருகன் கூறுகையில்,கொரோனா தொற்று பாதிப்புகளை எடுத்துரைத்து, அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மேலும்,  மைதானத்திற்கும்  சீல் வைத்துள்ளோம், என்றார். இச்சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அனைவரும் வாட்டாச்சியரை பாராட்டி வருகின்றனர்.

Tags : stadium ,Wattachier , Corona, Horror, Cricket, Youth, Ground, Seal, Wattachier, Accumulation, Appreciation
× RELATED திருச்சி திருவெறும்பூர் அருகே...