×

வீடுகளுக்கான பிராட்பேண்ட் உரிமக் கட்டணம் குறைப்பு? : மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்!!!

டெல்லி : வீடுகளுக்கான பிராட்பேண்ட் உரிமக் கட்டணத்தை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கால் பல்வேறு ஐடி ஊழியர்கள் மற்றும் பல தொழில் நிறுவன ஊழியர்கள் என அனைவரும் தமது வீடுகளில் இருந்தபடியே இணையதள உதவியுடன் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வீடுகளுக்கு பிராட்பேண்ட் சேவைகளை வழங்க நிறுவனங்களுக்கான உரிம கட்டணம் ஆண்டுக்கு ஒரு ரூபாய் என்ற வகையில் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வழக்கமான பிராட்பேண்ட் சேவைகளுக்கான உரிம கட்டணம் மொத்த வருவாயில் 8 சதவீதமாக கணக்கிட்டு ஆண்டுக்கு சுமார் 880 கோடி ரூபாய் வசூலிக்கப்படும். இதனை மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு கொண்டு செல்லும்முன், தொடர்புடைய அமைச்சகங்களின் கருத்து கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், கட்டண குறைப்பு கொண்டுவரப்பட்டால், ரிலைன்ஸ், ஏர்டெல், ஓடபோன்  உள்ளிட்ட 350 இணையதள சேவை நிறுவனங்கள் பயன்பெறும் எனவும் கூறப்படுகிறது. எனினும், வணிக நிறுவனங்களுக்கான இணையதள சேவைகட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் வீடுகளுக்கான பிராட்பேண்ட் உரிமக் கட்டணத்தை விரைவில் குறைப்பதற்காக, மத்திய அரசு தொடர்ந்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : homes ,Central Government ,government , Housing, broadband, license fees, reduction, federal government, information
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...