×

இந்திய- சீன வீரர்கள் இடையே மீண்டும் மோதலா ?: சிக்கிம் எல்லையில் வீரர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கும் காணொளி காட்சியால் பதற்றம்!!

டெல்லி : லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவத்தினர் மோதிக் கொண்ட பரபரப்பு அடங்குவதற்குள், சிக்கிம் எல்லை அருகே இரு நாட்டு வீரர்கள் சண்டையிடுவது போல் வெளியாகி இருக்கும் காணொளி ஒன்று பதற்றத்தை அதிகரித்துள்ளது. சிக்கிம் மாநில எல்லையில், மலைகள் சூழ்ந்த உயரமான ஒரு பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. 5 நிமிடங்கள் நீளும் அந்த காணொளி, செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரும்பிச் செல், சண்டையிட வேண்டாம் என்று சத்தமிடும் இரு தரப்பினரும் கைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர்.பணியால் சூழப்பட்ட இடத்தில் நடைபெறும் இந்த மோதல், எப்போது படம்பிடிக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி, இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட கடுமையான மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட பி[பதற்றத்தை தணிக்க இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், வெளியாகி இருக்கும் தாக்குதல் காணொளியால் பரபரப்பு அதிகரித்துள்ளது.


Tags : Re-clash ,Indo ,Chinese ,soldiers , India, China, soldiers, conflict, Sikkim, border, video, visual, tension
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...