×

2 சிறப்பு விமானங்கள் மூலம் ஜெர்மன், குவைத்தில் சிக்கிய 255 இந்தியர்கள் மீட்பு: 14 நாட்கள் தனிமை

சென்னை: ஜெர்மன், குவைத் ஆகிய நாடுகளில் சிக்கித் தவித்த 255 இந்தியர்கள் 2 சிறப்பு விமானங்களில் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஜெர்மன் நாட்டில் சிக்கித் தவித்த 90 இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரக உதவியால் மீட்கப்பட்டு நேற்று காலை ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானத்தில் பிராங்பர்ட்டிலிருந்து  மும்பை வழியாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 67 ஆண்கள், 18 பெண்கள், 5 சிறுவர்கள் அடங்குவர். இவர்களுக்கு சென்னை விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனை மற்றும் நடைமுறைகள் முடிக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் 12 பேர் இலவச தங்குமிடமான மேலக்கோட்டையூர் விஐடிக்கும், 78 பேர் கட்டணம் செலுத்தும் தங்குமிடமான தனியார் ஓட்டலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் குவைத் நாட்டில்  சிக்கித் தவித்த 165 இந்தியர்கள் தனியார் விமானத்தில் நேற்று முன்தினம் இரவு சென்னை அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். எனவே அந்த நிறுவனமே தனி விமானம் ஏற்பாடு செய்து அழைத்து வந்தது. இவர்கள் 165 பேரும் ஆண்கள். தனியார் நிறுவன ஏற்பாட்டில் இவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில்  இலவச மருத்துவ பரிசோதனை இல்லை.

இவர்களுக்கு இலவச தங்கும் இடவசதியும் அரசு செய்யவில்லை. குடியுரிமை, சுங்கச் சோதனைகள் முடிந்து தனி பஸ்களில் ஏற்றி சென்னை நகரில் உள்ள ஓட்டல்களுக்கு 14  நாட்கள் தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் தங்கியுள்ள ஓட்டல்களில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள்  சென்னை மாநகராட்சி கண்காணிப்பில் நடக்கும். தனியார் ஓட்டலில் தங்கும் செலவு உள்ளிட்டவைகளை அவர்களை அழைத்து வந்த தனியார் நிறுவனமே ஏற்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kuwait ,Indians ,German , 2 Special Forces, German, Kuwait, Indians Rescue
× RELATED சென்னையில் இருந்து துபாய், குவைத்,...