×

கொரோனா, எல்லை சண்டை; சீனாவை எதிர்த்து இந்தியா 2 போர்: கெஜ்ரிவால் பரபரப்பு

புதுடெல்லி: ‘சீனாவை எதிர்த்து இந்தியா இரண்டு போரில் ஈடுபட்டுள்ளது,’ என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார். இது தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலமாக கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டி வருமாறு:  இன்று, சீனாவுக்கு எதிராக இந்தியா 2 போர்களில் ஈடுபட்டுள்ளது.. ஒன்று சீனாவிலிருந்து வந்த கொரோனாவுக்கு எதிரானது, மற்றொன்று எல்லையில் சண்டை. ஒருபக்கம், கொரோனாவுக்கு எதிராக நம் நாட்டின் டாக்டர்கள், நர்சுகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம், எல்லையில் சீன வீரர்களை எதிர்த்து நம் வீரர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். நம் தைரியமிக்க 20 வீரர்கள் பின்வாங்கவில்லை.

அதே போல் நாங்களும் பின்வாங்க மாட்டோம். சீனாவுக்கு எதிரான இரு போரிலும் வெற்றி பெறுவோம். இந்த ஒட்டுமொத்த நாடும் டாக்டர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் ஆதரவாக துணை நிற்கிறது. இந்த விஷயத்தில் அரசியலுக்கு இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார். லடாக் மோதல் விவகாரத்தில், பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்து வரும் நிலையில், பாஜவுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவாலின் தைரியம்
கொரோனாவை பரப்பியது சீனா என அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல நாட்டு அதிபர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனாலும், பிரதமர் மோடி எந்த இடத்திலும் கொரோனாவையும் சீனாவையும் தொடர்புபடுத்தி பேசியதில்லை. இந்நிலையில், ‘சீனா பரப்பிய கொரோனா’ என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தைரியமாகவும், இந்திய தலைவர்களில் முதல் முறையாகவும் கூறியிருப்பது பரபரப்பாகி உள்ளது.

Tags : Kejriwal ,India ,Corona ,war ,China , Corona, border fighting, China, India, Kejriwal
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...