×

சில்லி பாயின்ட்...

* ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தபோது அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தினார். ஆனால் அவரது சீரிய தலைமைப் பண்புக்கு உரிய மரியாதை கொடுத்து பாராட்டத் தவறிவிட்டோம் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
* வாய்ப்பு கிடைத்தால் செரீனா வில்லியம்சுடன் விளையாடத் தயாராக இருக்கிறேன் என்று அர்ஜென்டினாவை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீராங்கனை கேப்ரியலா சபாட்டினி (50 வயது) தெரிவித்துள்ளார். இவர் தனது 26வது வயதிலேயே சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
* கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற விளையாட்டு நமக்கு உதவும் என்று பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் பயிற்சி செய்யும்போது அணியும் டிஷர்ட்களில் உள்ளூர் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் உட்பட கொரோனா போராளிகளின் பெயர்களைப் பொறிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.

* தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் தனது நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 7 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
* ரஞ்சி டிராபி உட்பட முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அரியானா, வடக்கு மண்டலம் அணிகளுக்காக சிறந்த சுழற்பந்துவீச்சாளராகவும், உள்ளூர் போட்டிகளில் நடுவராகவும் பணியாற்றி முத்திரை பதித்த ராஜிந்தர் கோயல் (77 வயது) நேற்று முன்தினம் காலமானார். கோயல், ரஞ்சி கோப்பையில் 600 விக்கெட் உட்பட 157 முதல்தர போட்டிகளில் 750 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அவரது மறைவுக்கு சச்சின், ரவி சாஸ்திரி, கோஹ்லி உட்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Rahul Dravid, Serena Williams, West Indies
× RELATED டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை...