×

டிக்-டாக் புகழ் ரவுடிபேபி தற்கொலை முயற்சி?... திருப்பூர் போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி(34). இவர் ரவுடி பேபி சூர்யா என்ற பெயரில் டிக்-டாக்கில் பிரபலமானவர். சிங்கப்பூர் சென்றிருந்த அவர், கடந்த 16ம் தேதி விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது, உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். இந்நிலையில், டிக்-டாக்கில் மூலம் தன்னை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பூண்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், சூர்யா மீது வீரபாண்டி போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சூர்யாவை ஆம்புலன்சில் அழைத்து சென்றதை அக்கம்பக்கத்து வீட்டினர் பார்த்துள்ளனர்.  சூர்யா தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.  அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சூர்யா உண்மையில் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது விளம்பரத்துக்கு செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Routebabi ,Tirupur ,Investigation ,police investigation ,Rudyabei , Tic-Tac, Routledge, suicide attempt, Tirupur
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்