×

டிக்டாக்கிற்கு போட்டியாக வந்த சிங்காரிக்கு செம கிராக்கி: 3 நாளில் 5 லட்சம் கஸ்டமர் புகுந்தனர்

பெங்களூரு: சீனாவின் டிக்டாக் ஆப்-க்கு போட்டியாக வந்துள்ள இந்திய சமூக வலைதள ஆப்பான ‘சிங்காரி’யை 72 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த இருவரால் சிங்காரி ஆப் உருவாக்கப்பட்டது. வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை உருவாக்கும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென சிங்காரி ஆப்பை பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 15ம் தேதி இந்திய - சீன எல்லையில் சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தினால் சீனா பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என இந்திய மக்கள் முழக்கமிடத் தொடங்கியுள்ளனர்.

இதன் எதிரொலியாக பலதரப்பட்டோரும் விரும்பி பயன்படுத்தி வந்த சீனாவின் டிக்டாக் ஆப் தனது மவுசை இழந்து வருகின்றது. அதனை மக்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர். இதற்கு மாற்றாக இந்திய சமூக ஆப்பான ‘சிங்காரி’ ஆப்பின் பக்கம் மக்கள் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். இது குறித்து ஆப்பை உருவாக்கிய பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரபல வீடியோ ஷேரிங் ஆப்பான சிங்காரியானது 72 மணி நேரத்தில் 5 லட்சம் பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிக சந்தாதாரர்கள் சிங்காரி குடும்பத்தில் இணைந்து வருகின்றனர்,” என்றனர்.

வீடியோ போட்டால் பணம்
சிங்காரி ஆப்பில் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு வீடியோவிற்கும் அந்த வீடியோவின் உள்ளடகத்தை உருவாக்கியவருக்கு ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புள்ளி அளிக்கப்படும். இந்த புள்ளிகளை பணமாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

பல மொழிகளை பயன்படுத்தலாம்
சிங்காரி ஆப்பை பல்வேறு மொழிகளில் பயன்படுத்தலாம். அதன் பயனர்கள் வீடியோக்களை பதிவிறக்கமும், பதிவேற்றமும் செய்யலாம். நண்பர்களுடன் சாட்டிங், புதியவர்களுடன் கலந்துரையாடல், வீடியோக்களை பகிர்வது உள்ளிட்டவற்றை செய்யலாம்.

Tags : customers , Dick Dog, Singari
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...