×

மாதவரம் துணை வட்டாட்சியருக்கு கொரோனா

புழல்: மாதவரம் துணை வட்டாட்சியர் மற்றும் கிராம உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 54 வயதுடைய துணை வட்டாட்சியருக்கும், மாதவரம் கிராம உதவியாளராக பணியாற்றி வரும் புழல், எம்ஜிஆர் நகரை சேர்ந்த 52 வயது நபருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வந்து சென்ற பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தண்டையார்பேட்டை: ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, மண்ணடி, பாரிமுனை, கொத்தவால்சாவடி, ஏழுகிணறு, கொண்டித்தோப்பு, மிண்ட் தெரு, ராயபுரம் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் நேற்று 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கொடுங்கையூர் கண்ணதாசன்நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், வெங்கடேஷ்வரா காலனி, முத்தமிழ் நகர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை,

பாரதி நகர், அரிநாராயணபுரம், மேயர் பாசுதேவ் தெரு, ஆரணி ரங்கன்தெரு, புது வண்ணாரப்பேட்டை சேணியம்மன் கோயில் தெரு, செரியன் நகர், காசிமேடு, தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் மற்றும் கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 143 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கைதிக்கு தொற்று
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பாரதி நகரை சேர்ந்த 26 வயது ரவுடி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, கடந்த மே மாதம் 4ம் தேதி அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Deputy Supervisor ,Corona ,Deputy Secretary , Subdivision of the Month, Corona
× RELATED திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்