பாஸ்ட் புட் கடை உரிமையாளரை தாக்கிய ரவுடி குண்டாசில் கைது

திருவள்ளூர்: திருவள்ளூரில் பாஸ்ட் புட் கடை உரிமையாளரை தாக்கிய ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (38). இவர் அப்பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடையில் சாப்பிட்டுள்ளார். அதற்கான பணத்தை கேட்ட உரிமையாளர் பாபுவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினார். இதுகுறித்து, புகாரின் பேரில் திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப் பதிவு செய்து ஆகாஷை கைது செய்து சிறையில் அடைத்தார். ஆகாஷ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது.

இதையடுத்து ஆகாஷை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு, எஸ்.பி அரவிந்தன் பரிந்துரை செய்தார். தொடர்ந்து ஆகாஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார். உத்தரவு நகலை புழல் சிறை கண்காணிப்பாளரிடம் நேற்று இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஒப்படைத்தார். அதன்படி ரவுடியை சிறையில் அடைத்தனர்.

Related Stories: