×

மதுபாட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு பகுதிகளில் குவார்ட்டர் மதுபாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அரசு உத்தரவுபடி கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை கொரோனா பாதிப்பு பகுதிகளில் உள்ள 20 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்குக்கு முன்பே மதுபாட்டில்களை ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் பதுக்கி வைத்து தற்போது விற்பனை செய்து வருகின்றனர்.

இதில், ஒரு குவார்ட்டர் பாட்டில் ₹500, ஒரு கட்டிங் ரூ250 என கூடுதலாக விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக செவ்வாப்பேட்டை, திருவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மதுபான விற்பனை உள்ளூர் போலீசாரின் ஆசியோடு கனஜோராக நடந்து வருகிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு கூடுதல் விலைக்கு மதுபானங்களை வாங்கி போதை ஏற்ற முடியாத சிலர், கள்ளச்சாராயம் காய்ச்சும் செயலிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, போலீசார் திடீர் சோதனை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : brewing , Brewery, sales
× RELATED அதிக பனிப்பொழிவால் தைலம் காய்ச்சும் தொழில் பாதிப்பு