×

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் கிராமங்களில் கொரோனா டெஸ்ட்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று கொரோனா டெஸ்ட் எடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் 39 ஊராட்சிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி ஆகியவை உள்ளன. தற்போது, கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால், வரும் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு உள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 39 ஊராட்சிகளில் அடங்கிய கிராமங்களில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது.

இதற்காக அந்தந்த ஊராட்சி சார்பில் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு வீடு வீடாக சென்று விவரங்களை சேகரித்து வருகின்றனர். அவர்கள், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள நபர்களின் பெயர்கள், வயது, பாலினம், கைப்பேசி எண், கர்ப்பிணிகள், 5 வயதுக்கு உட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரை, ரத்த கொதிப்பு, இதயநோய், சிறுநீரக நோய், புற்றுநோய், மாற்றுத் திறனாளிகள், நீண்டநாள் சிகிச்சையில் இருப்பவர்கள், காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், சென்னையில் பணிபுரிபவர்கள், சென்னையில் இருந்து வந்தவர்கள்,  என விசாரித்து உடலின் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு ஆகிய விவரங்களை சேகரித்து, அதற்கான பரிசோதனை செய்கின்றனர்.

Tags : Villages ,Corona Test ,Kattankolathur Union , Kattankolathur, Corona Test
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு