×

மிசோரமில் நிலநடுக்கம் குறித்து முதல்வர் ஷோரம்தங்காவை தொடர்பு கொண்டு உதவிகள் செய்வதாக பிரதமர் மோடி உறுதி

டெல்லி: மிசோரம் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில் அம்மாநில முதல்வர் ஷோரம்தங்காவை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவான இந்த நிலநடுதக்கத்தால் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டது. மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மிசோரம் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில் அம்மாநில முதல்வர் ஷோரம்தங்காவை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். மத்திய அரசு தன்னாலான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று நான் உறுதியளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மிசோரம் மாநில முதல்வர் ஷோரம்தங்கா நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : earthquake ,Chief Minister ,Modi ,Shoram Danga ,Mizoram , Mizoram, Earthquake, Chief Minister Shoramtanga, Communication, Aids, Prime Minister Modi
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்