×

ரூ.38 லட்ச ஹெல்த் பாலிசி, ரூ.2,28 லட்சம் பணம் : கம்போடியாவிற்கு வரும் வெளிநாட்டினர் கொரோனா சிகிச்சை, இறப்பு செலவுக்காக டெபாசிட் கட்ட நிர்பந்தம்!!

கம்போடியா : வெளிநாடு பயணிகள் அனைவரும் கொரோனா டெபாசிட்டாக ரூ.38 லட்ச ஹெல்த் பாலிசியுடன், ரூ.2,28 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று கம்போடியா அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவின் உக்ரத்தால் கடந்த சில மாதங்களாக சர்வதேச விமான போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனாவின் வீரியம் குறைந்த நாடுகள் சில, சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளித்து வருகிறது. அந்த வரிசையில் கொரோனாவை வென்ற கம்போடியா அரசு, தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டினர் பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. எனினும் வெளிநாட்டினர் கம்போடியாவில் பயணம் மேற்கொள்ள சில நிபந்தனைகளையும் அந்நாட்டு அரசு விதித்துள்ளது.

*அதாவது, வெளிநாட்டு பயணிகள் ஒவ்வொருவரும் விமான நிலையத்திலேயே குறைந்தது 50000 டாலர் (ரூ .38 லட்சம்) பாதுகாப்புடன் கூடிய சுகாதார காப்பீட்டு சான்று மற்றும் 3,000 டாலரை(2.2 லட்சம்) டெபாசிட செய்ய வேண்டும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரொக்கமாகவோ அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவோ டெபாசிட்டை செலுத்தலாம்.

*வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை முடிவு வரும் வரை, பயணிகள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவர். கொரோனா பரிசோதனைக்கு மட்டும் அவர்களின் டெபாசிட்டில் இருந்து 165 டாலர் வசூலிக்கப்படும். பரிசோதனைக்கு 160 டாலர், பரிசோதனை மையத்திற்கு பயணியை அழைத்து செல்வதற்கு 5 டாலர், ஹோட்டலில் 3 வேளை உணவுக்கு 60 டாலர் வீதம் வசூலிக்கப்படுகிறது. பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தால், பரிசோதனை கட்டணமாக165 டாலர் வசூலிக்கப்பட்டு, எஞ்சிய தொகை பயணியிடம் கொடுக்கப்படும்.

*ஒரு வேளை, விமானத்தில் ஏதாவது ஒரு பயணிக்கு கொரோனா தொற்று உறுதியானால், அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவர். உணவு, தங்குமிடம் ஆகிய செலவுகளுக்காக பயணிகளிடம் இருந்து தலா 1,281 டாலர் வசூலிக்கப்படுகிறது. கொரோனா டெபாசிட்டில் இருந்து இந்த தொகை கழிக்கப்பட்டு, எஞ்சிய தொகை பயணி நாட்டை வீட்டு செல்லும் போது, அவரிடம் தரப்படும்.

*பரிசோதனையில் பயணிக்கு பாசிட்டிவ் என வந்தால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார். அவரின் கொரோனா டெபாசிட்டில் இருந்து நாளொன்றுக்கு 330 டாலர் வசூலிக்கப்படும். ஒரு வேளை கொரோனா டெபாசிட் தொகை தீர்ந்துவிட்டால், ஹெல்த் பாலிசி பயன்படுத்தப்படும்.

*பகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாலும், அவரின் இறுதி சடங்கிற்கு ஆகும் செலவுக்கு அவரின் கொரோனா டெபாசிட்டில் இருந்து 1,500 டாலர் வசூலிக்கப்படும்.

மனித இனத்தை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரசால், கம்போடியா நாட்டில் இதுவரை 128 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், அந்நாட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : foreigners ,death ,Cambodia , Cambodia, Foreigners, Corona, Treatment, Death, Cost, Deposit, Compulsion
× RELATED ஆயிரம் லிங்கங்களின் ஆறு