×

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லையில் 26 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!!!

திருநெல்வேலி:  நெல்லை மாநகர பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 26 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கொரோனா சிறப்பு மண்டலமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை விளங்கி வருகிறது.  இங்கு நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த 200 பேரும் தென்காசியை சேர்ந்த 4 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் நேற்று புதிதாக கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டவர்களின் தகவலை அரசு மருத்துவமனை வெளியிடவில்லை. இதனிடையே 2 நாட்களில் 30க்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் இன்று காலை கோடீஸ்வரர் நகரை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புகள் அதிகரிப்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 26 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒருவர் மட்டுமே இருசக்கர வாகனங்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் முகக்கவசம் அணிதல், சமூக இடைவேளி பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அம்மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.



Tags : corona spread ,areas ,places , Corona, spread, paddy, 26 places, areas, notification
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 30...