×

மருத்துவர்கள் பயன்படுத்திய ஆடை, முகக்கவசம் வாய்க்காலில் வீச்சு: கொரோனா பீதியில் மக்கள்

திட்டக்குடி: திட்டக்குடி அருகே  மருத்துவர்கள் பயன்படுத்திய ஆடை, முகக்கவசம், கையுறை ஆகியவை பாசன வாய்க்கால்களில் வீசப்பட்டுள்ளதால் கொரோனா பரவும் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.    கடலூர் மாவட்டம் திட்டக்குடி  பகுதிக்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் உரிய  பரிசோதனை செய்வதற்காக அரசு கலை கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனருகே  மருத்துவப் பரிசோதனைக்கு உபயோகிக்கப்பட்ட கை உறைகள், முகக்கவசங்கள்,  மருத்துவர்கள் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் சாப்பிட்ட உணவு பொட்டலங்கள்  பயன்படுத்தி விட்டு இதனை அரசு கல்லூரி முன்புறமுள்ள பாசன வாய்க்கால்களில்  வீசி உள்ளனர்.  

பாசன வாய்க்கால்களில் கால்நடைகள் அதிக அளவில் அங்கு சென்று  உபயோகிக்கப்பட்ட முகக்கவசம், கையுறைகளை அசைபோடுகிறது. அதுமட்டுமின்றி அந்த  வழியாக  விவசாயிகளும் அதிக அளவில் செல்கின்றனர். இதனால் வைரஸ் தொற்று  ஏற்படும் என பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் உள்ள கழிவுகளை  அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Doctors ,panic ,Corona , Doctors,clothing, mask, mouthpiece, Corona panic people
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை