×

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் திருநெல்வேலி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு . அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சோலையார் மற்றும் வால்பாறையில் 6செ.மீ மழையும், கோவை மாவட்டம் சின்கோனா மற்றும் சின்னகல்லாரில் 5 செ.மீ மழையும் , நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், கர்நாடகா கேரளா கடல் பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதி, மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதி, வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய குஜராத் கடலோர பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags : districts ,Tirunelveli Tenkasi ,Tirunelveli , Thermal Convection, Tirunelveli, Tenkasi, Meteorological Center
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை