×

குடியாத்தம் அருகே பரபரப்பு வனப்பகுதிக்குள் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: கொலை செய்யப்பட்டது யார்? போலீசார் விசாரணை

குடியாத்தம்:  வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தீர்த்தமலை வனச்சரக பகுதியில் ஆந்திர பகுதியை சேர்ந்தவர்கள், மது அருந்துவது, சீட்டு விளையாடுவது, குடியாத்தம் பகுதியை சார்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது, கட்டப்பஞ்சாயத்து நடத்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது வழக்கம். மேலும், குடியாத்தம் வனப்பகுதிக்கு  செல்லும் அடர்ந்த பகுதிகளில்,   ஆட்களை அடித்துக் கொன்று, சடலத்தை வீசி செல்வது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று தீர்த்தமலை பகுதியில் விவசாயிகள் சிலர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, மனித எலும்புக்கூடு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, சுமார் 10 மாதங்களுக்குப் முன்பு இறந்தவரின் மனித எலும்புக்கூடு என தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் அவரை கொலை செய்து சடலத்தை வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு, தீர்த்தமலை வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
இதுகுறித்து குடியாத்தம் ஆர்டிஓ ஷேக் மன்சூர், தாசில்தார் வத்சலா, விஏஓ காந்தி, மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத எலும்பு கூடு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : discovery ,human skeleton , wilderness ,settlement, who was murdered,Police, investigating
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...