×

கோவை அருகே இறந்த யானைக்கு மற்றொரு ஆண் யானையின் தந்தம் குத்தியதால் வாயில் காயம்: வனத்துறை

கோவை: கோவையில் இறந்த யானைக்கு மற்றொரு ஆண் யானையின் தந்தம் குத்தியதால் வாயில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானையின் மேல் தாடையில் 9 செ மீ விட்டமும், 15 செ மீ ஆழமும் கொண்ட காயம் ஏற்பட்டுள்ளது என்று வனத்துறை தெரிவித்துள்ளது. வாயில் ஏற்பட்ட காயத்தால் 10 நாட்களாக யானை உணவு உட்கொள்ளாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இறந்த யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அருகிலேயே  புதைக்கப்படும் என்று வன அலுவலர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

Tags : Coimbatore ,Forest Department , Coimbatore, male elephant, ivory, forest department
× RELATED நீலகிரியில் ஆய்வு செய்து விட்டு...