×

மதுரையில் ஆர்டிஓ அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று எதிரொலி : 3 நாட்கள் அலுவலகம் மூடல்! ..

மதுரை:  மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வட்டார அலுவலகம் 3 நாட்கள் மூடப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரையை பொறுத்தவரையில் 205 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 389 பேர் குணமடைந்து வீடு சென்ற நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளன.

மேலும், கொடூர நோய் தொற்று  காரணமாக காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலக ஊழியரும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றக்கூடிய மதுரை காமராஜர் நகரை சேர்ந்த  38 வயதுடைய ஒருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, அலுவலகத்தில் இருக்கக்கூடிய பணியாளர்கள் 17 பேரும் மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்டனர். மேலும் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இன்று முதல் 3 நாட்களுக்கு வட்டார அலுவலகம் மூடப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, வட்டார அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நோய்  தடுப்பு நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Tags : Madurai ,office worker ,RTO ,Corona , Madurai, RTO, office, employee, corona, infection, 3 days, office, closure
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...