×

நன்னடத்தை மீறிய பிரபல ரவுடிகளுக்கு 165 நாட்கள் சிறை

திருவள்ளூர்: மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜோசப் தெருவை சேர்ந்தவர் நேதாஜி (23) மற்றும் குமார் (28). இதில் நேதாஜி மீது 3 கொலை உட்பட 6 வழக்குகள், குமார் மீது 3 கொலை உட்பட 12 வழக்குகள், பொன்னேரி, மீஞ்சூர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இருவரையும் போலீசார் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்த இவர்கள் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர். புகாரின்பேரில் ரவுடிகள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டதால் நேதாஜியை வரும் 2.12.2020 வரை 165 நாட்களும், குமாரை வரும் 2.9.2020 வரை 74 நாட்களும் புழல் சிறையில் அடைக்க பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இருவரையும்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags : jail ,violators , Celebrity rowdy, 165 days jail
× RELATED முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்...