கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஆணையருக்கு தொற்று: பிடிஓ அலுவலகம் மூடல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஆணையர் மற்றும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் நேற்று மூடப்பட்டது.  கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஆணையராக சென்னையை சேர்ந்த 50 வயது நபர் பணிபுரிந்து வருகிறார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டது.  இதேபோல் தீயணைப்பு   நிலைய ஊழியர் உள்ளிட்ட கும்மிடிப்பூண்டி நகரை சேர்ந்த 5 பேர், கவரப்பேட்டையை சேர்ந்த முதியவர்,  சூரப்பூண்டியை சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் மாநெல்லூரை சேர்ந்த இருவர் ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஒரே நாளில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஆணையர் மற்றும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.  இதனைதொடர்ந்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணியில் கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   

Related Stories:

>