×

வழக்கை மாற்றி பதிவு செய்யக்கோரி இறந்தவரின் உடலை எடுக்க மறுத்து கிராம மக்கள் போராட்டம்: கடப்பாக்கம் அருகே பரபரப்பு

செய்யூர்: கடப்பாக்கம் அருகே சாலை விபத்தில் பலியானாவர் மீது போடப்பட்ட வழக்கை மாற்றி பதிவிடக் கோரி கிராம மக்கள் இறந்தவரின் உடலை எடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடப்பாக்கம் ஆலம்பரைக்குப்பத்தை சேர்ந்தவர் சேகர் (29). சூனாம்பேடு அடுத்த பொன்னியநல்லூர் கிராமத்திலுள்ள நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவர், 19ம் தேதி மாலை 7 மணி அளவில்  கடப்பாக்கத்திலிருந்து மின்சாதனப் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, பூமிகுப்பம் பகுதியிலிருந்து லோகநாதன் (23), பாண்டியன் (30) ஆகிய இருவரும் எதிர்திசையில் கடப்பாக்கம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். கடப்பாக்கம் மீன் மார்க்கெட் அருகே வந்தபோது, இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில், மூவரும் பலத்த காயம் அடைந்த அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் சேகர் பரிதாபமாக இறந்தார். இதனிடையே லோகநாதன், பாண்டியன் தரப்பினர் கொடுத்த புகாரை ஏற்று போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில், பாதிப்பு தங்களுக்குத்தான் என, எனவே, வழக்கை மாற்றி பதிவிட கோரி இறந்த சேகரின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர்  இறந்தவரின் உடலை இறுதிச்சடங்கிற்கு எடுக்க மறுத்து நேற்று முன்தினம மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சேகரின் குடும்பத்தாருக்கு உரிய நஷ்டஈடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த, சூனாம்பேடு போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரசம் செய்தனர். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து சேகரின் உடல் இறுதி சடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது.


Tags : Parambaram ,deceased ,Kadappakkam , Kadapaacam,body of the dead, the villagers struggle
× RELATED ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2...